Amarkantak
அமர்கண்டக்
மத்தியபிரதேஷ்

அமர்கண்டக், மத்திய பிரதேசத்தின் கிழக்கில், சத்திஸ்கர்
எல்லையில் உள்ளது. இங்கு தான் புனித நர்மதை
நதியின் உற்பத்தி தொடங்குகிறது.
அமர்கண்டக்கிற்கு ரயில் மூலமாக அடைய மிக அருகில் உள்ள ரயில் நிலையம் “பென்ட்ரா
ரோடு” (Pendra Road) ஸ்டேஷன். இங்கிருந்து அமர்கண்டக் 40 km தூரத்தில் உள்ளது. இந்த ரயில் நிலையம், சென்னை--பிலாஸ்பூர் மார்க்கத்திலும்,
ஜபல்பூரிலிருந்து (மேலுள்ள வரைபடத்தில் உள்ள பெடேகாட் அருகில்) 6 மணி நேர
தூரத்தில் கிழக்கில் உள்ளது. சென்னையிலிருந்து, விமானம் மூலம், ஜபல்பூர்
அல்லது ராய்பூர் விமான நிலையம் அடைந்து, கார்மூலமாக அமர்கண்டக்கை நேரடியாக சென்றடையலாம். ஜபல்பூர், பிலாஸ்பூர், மற்றும் ராய்பூரிலிருந்து
கார் மூலமாகவும் நேரடியாக அமர்கண்டக் செல்லமுடியும்.
அமர்கண்டக் ஓரூ மலைப்பிரதேசம். நர்மதை நதியில் ஒவ்வொரு கல்லும் ஈஸ்வர ஸ்வரூபம்
சிவனுக்கு ஒப்பானது. இந்த புண்ணிய
க்ஷேத்ரத்தில் ஸ்ரீகாஞ்சி மடம் நிறுவப்பட இருக்கிறது. இதன் தொடக்கமாக, அக்டோபர் 2017 ல், ஸ்கந்த
புராணம், சிவரஹஸ்ய பாராயணம், மற்றும் விசேஷ உபன்யாசம், நம் கும்பகோணம் ஸ்வாமிகளுடனும்
மற்றும் இரண்டு ஸன்யாசிகளுடனும் சிறப்பாக நடந்தேறியது.
அமர்கண்டக்கில் பார்க்கவேண்டிய
புண்ணிய ஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா இடங்களை சுற்றிப்பார்க்க குறைந்தது 2 நாட்கள் தேவைப்படும்.
1.
ஜ்வாலேஸ்வரர் கோவில் மற்றும் அமரேஸ்வர்
மகாதேவ் கோவில்:
பென்ட்ரா ரோடிலிருந்து அமர்கண்டக் போகும்
வழியில் உள்ளது
2.
கபில் தாரா மற்றும்
சோன்முதா நீர் வீழ்ச்சிக்கள.
3.
நர்மதா உட்கம் கோவில்,
நர்மதை உற்பத்தி ஸ்தானம். இது மிக முக்கிய இடம்.
இது முதலில் பார்க்க வேண்டிய ஸ்தானம்.
4.
ஸ்ரீ சர்வோதயா திகம்பர்
சமணர் கோவில் (கோவில் வேலைகள் முடியும் தறுவாயில் உள்ளது)
5.
புராதன கலாசேரி கோவில் (maintainded by ASI)
6.
ஸ்ரீ யந்திராமந்திர
மந்திர்
7.
பிருகு முனி கமண்டல்: இது
ரம்யமான மலைப்பாதையில் 1.5 கிமீ தூரத்தில் உள்ளது. இது ஒரு முக்கியமாக பார்க்க வேண்டிய ஸ்தலம். இதற்கு நடந்துதான் செல்லவேண்டும்.
அமர்கண்டக்கில் தங்குவதற்கு
4-5 ஹோட்டல் கள் உள்ளன. இது பற்றி tripadvisor.com மூலம் அறியலாம்.
மத்திய
பிரதேசத்தில் பார்க்க வேண்டிய மற்ற இடங்கள்:
பச்மார்கி (Pachmarhi/அமர்கண்டக்கிலிருந்து
470 கி.மீ): இது ஒரு மலைப்பிரதேசம். இதற்கு பிபாரியா ரயில் நிலையத்திலிருந்து
போக வேண்டும் (பிபாரியா/Piparia, பிலாஸ்பூர்-போபால் மார்க்கத்திலிருக்கிறது)
போபால் (பச்மார்கியிலிருந்து 190 கிமீ): போஜ்பூர்,
பீம்பெட்கா குகைகள், சஞ்சி
உஜ்ஜைன்: மஹா காலேஸ்வர், ஓம் காரேச்வர்,
மகேஸ்வர், அகல்யா பாய் காட், மாண்டு (ராணி ரூப்மதி)
விமான நிலையங்கள்
மூலம்: ஜபல்பூர், போபால், இன்டோர்
ரயில் நிலையங்கள்
மூலம்: ஜபல்பூர், போபால், இன்டோர்,
உஜ்ஜைன், பிபாரியா, பென்ட்ரா ரோடு.
Contacts (not all of them are owner drivers)
|
Location
|
Contact
|
Mobile
|
|
Jabalpur
|
Sri Sankaran/Kanchi Balaji Temple
|
08109565606
|
|
Bilaspur
|
Sri Bilaspur Swamigal
|
09826685852
|
|
|
|
|
|
Drivers/Cabs
|
|
|
|
Jabalpur
|
Akash Gupta
|
07470450503
|
|
Pedra
Road Train Station
|
Gore
Padwar
|
08889211718
|
|
Amarkantak
|
Kajju
(Auto)
|
09479734919
|
|
Pipariya
Train Station
|
Kapil
Juneja (travel agent/transport owner for all locations in MP)
|
09425646593
07697967791 08821849337
|
|
Ujjain
|
Amir
Khan (auto)
|
09907070448
|
|
Bhopal
|
Pintu
|
09617554831
|